29256.gif



விண்டோஸ் இயக்கம் தன் சிஸ்டத்தில் பைல் அசோசியேஷன் (File Association) என்று ஒரு செயல்பாட்டினை வைத்துக் கொண்டு இயக்கி வருகிறது. இதன் படி ஒரு பைலை எந்த புரோகிராம் வடிவமைத்ததோ அந்த பைலைத் திறக்க முயற்சிக்கையில் அதே புரோகிராம் மூலம் அந்த பைல் திறக்கப்படும். ஒரு கம்ப்யூட்டர் புதியதாக இருக்கையில் இந்த செயல்பாடு பார்ப்பதற்கும் மேற்கொள்வதற்கும் நமக்கு ஒரு விருந்தாக இருக்கும். ஆனால் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து பல புரோகிராம்களை, குறிப்பாக ஒரே வகையான புரோகிராம்களை, இன்ஸ்டால் செய்கையில் சிறிய பிரச்சினை தலை தூக்கும்.

சில வேளைகளில் ஏதேனும் ஒரு பைலைத் திறப்பதற்காக அதன் பெயர் மீது நாம் டபுள் கிளிக் செய்திடுவோம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் புரோகிராமுக்குப் பதிலாக வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படும். எடுத்துக்காட்டாக பெயிண்ட் புரோகிராமில் ஒரு ஜெபெக் பைல் ஒன்றை உருவாக்கியிருப்போம். ஆனால் அதன் மீது டபுள் கிளிக் செய்கையில் அது மைக்ரோசாப்ட் பிக்சர் மேனேஜர் புரோகிராமில் திறக்கப்படும். அது மட்டுமின்றி இந்த பைலுக்கு அருகே பெயிண்ட் புரோகிராமிற்கான ஐகான் இல்லாமல் வேறு ஒரு ஐகானைக் காணலாம்.

இந்த குழப்பத்தை நீக்க என்ன வழி? நாம் எப்படி இந்த பைல் அசோசியேஷன் வேலையை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது? எப்படி ஒரு குறிப்பிட்ட வகை பைலை அதனை உருவாக்கி புரோகிராமுடன் இணைத்து வைப்பது? இந்த பைல் மற்றும் அதன் புரோகிராமுடன் தொடர்பு ஏற்படுத்துவது அந்த பைலின் எக்ஸ்டன்ஷன் பெயர் தான். இது ஒரு பைலின் முதன்மைப் பெயருடன் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டு மூன்று எழுத்துக்களில் இருக்கும்.

(உதாரணம் : obama.jpg இதில் jpg என்பது இதன் துணைப் பெயர்)

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் தொகுப்பினை வடிவமைக்கையில் சில வேடிக்கைத்தனமான வேலைகளையும் மேற்கொண்டது. எடுத்துக் காட்டாக ஸ்டார்ட் பட்டனிலேயே கம்ப்யூட்டரை நிறுத்தும் பட்டனையும் அமைத்தது. அதே போல பல பைல் எக்ஸ்டன்ஷன்களை விண்டோஸ் பயன்படுத்துபவர் களிடமிருந்து மறைத்ததுதான். போல்டர்களை நீங்கள் பார்க்கையில் பைல் எக்ஸ்டன்ஷன்களை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் அவற்றைக் காணும்படி அமைத்துவிடுவது நல்லது. அப்போதுதான் பைல்களைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

இதனை மேற்கொள்ள விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரைத் திறக்கவும். Start பட்டனில் வலது பட்டன் கிளிக் செய்து மேலே எழும் மெனுவில் explore என்பதைக் கிளிக் செய்தால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும்.

இதில் டூல்ஸ் மெனு திறக்கவும். இதில் Folder Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் View டேப் அழுத்தவும். பின் Advanced Settings என்பதன் கீழ் ‘Hide Extensions for known file types’ என்பதன் எதிரே உள்ள டிக் அடை யாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி பைல்கள் அனைத்தும் அதன் எக்ஸ்டன்ஷன் பெயர்களுடன் தான் தோற்றமளிக்கும்.

இனி ஒரு குறிப்பிட்ட எக்ஸ்டன்ஷன் கொண்ட பைல் வகையினை அதனை உருவாக்கிய புரோகிராமுடன் மீண்டும் இணைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி டூல்ஸ் மற்றும் போல்டர் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். அடுத்து போல்டர் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் file types என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது பின்னணியில் ஒரு சின்ன வேலையினை விண்டோஸ் மேற்கொள்வதால் டயலாக் பாக்ஸ் அமைதியாக இருக்கும்.

விண்டோஸ் பின்னணியில் பதிவான பைல்களின் எக்ஸ்டன்ஷன்களை ஆய்வு செய்து அவற்றின் லிஸ்ட் ஒன்றைக் காட்டும். இது ஆங்கில அகர வரிசைப்படி இருப்பதுடன் ஒவ்வொன்றின் தன்மை குறித்தும் சிறிய விளக்கம் இருக்கும். இவற்றில் ஒரு எக்ஸ்டன்ஷன் வகையில் கிளிக் செய்தால் அதனை உருவாக்கிய புரோகிராமின் பெயர் டயலாக் பாக்ஸின் அடிப்பாகத்தில் காட்டப்படும். இந்த புரோகிராமிற்குப் பதிலாக வேறு ஒரு புரோகிராமினை இதன் துணையாக அமைக்க வேண்டும் என எண்ணினால் அங்குள்ள Change என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது இரண்டாவதாக இன்னொரு டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதன் தலைப்பு Open With என்று இருக்கும். இங்கு மற்ற புரோகிராம்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் காட்டப்படும் புரோகிராம்களிலிருந்து தான் நீங்கள் செட் செய்திட புரோகிரா மினைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என் பதில்லை.

பிரவுஸ் பட்டனை அழுத்தி வேறு புரோகிராம்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு வேறு புரோகிராம்களின் பெயர் களையும் அவை இருக்கும் போல்டர்களையும் அறிந்திருக்க வேண்டும். இதிலிருந்து புரோகிராம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் பாக்ஸில் டிக் அடையாளத்தை இட வேண்டும். அப்போதுதான் இந்த புரோகிராமில் நீங்கள் தேர்ந்தெடுத்த எக்ஸ்டன்ஷன் கொண்ட பைல் திறக்கப்பட வேண்டும் என்பதனை செட் செய்துள்ளதாக எடுத்துக் கொள்ளப்படும்.



இங்கே விண்டோஸ் விஸ்டாவுக்கான அழகிய ஐந்து தீம்களை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். பழைய மைக்ரோசாப்டினுடைய தீமை பார்த்து பார்த்து அலுத்துப்போனவர்கள் பயன்படுத்திப்பார்க்கலாம்.

1.Redo WB
















2.Leo_Vista WB2



















3.Cabin Fever WB
















4.Carbon-ite WB




















5.Vienna 3 - Rapture



டாட் மேட்ரிக்ஸ் பிரின்டர்கள் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்துவிட்டன. லேசர் பிரின்டர்களை அனைவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். பலர் இங்க்ஜெட் பிரின்டர்களுக்கு கார்ட்ரிட்ஜ் வாங்கிக் கட்டுப்படியாகாததால் லேசர் பிரின்டர்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து லேசர் பிரின்டர்களை வாங்க முயற்சிக்கின்றனர். இவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர் பிரின்டர்களைப் பார்த்து திகைக்கின்றனர். விற்பனையாளர்கள் கூறும் பலவிதமான தொழில் நுட்ப சங்கதிகளைப் புரியாதவர்களாக இருக்கின்றனர்.

இதனால் தங்களின் தேவைக்கு அதிகப்படியான திறன் கொண்டதை வாங்குகின்றனர். அல்லது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு லேசர் பிரின்டரை வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் எப்படிப்பட்ட லேசர் பிரின்டர் உங்களுக்குத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டும் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

யாருக்கு லேசர் பிரின்டர் தேவை?

தினமும் ஏராளமான பக்கங்களை அச்சடிப்பவர்களுக்கு, வேகமாக அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, படங்களை துல்லியமாக, சீராக அச்சடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக லேசர் பிரின்டர் தேவை. விலை கட்டுபடியாகுமா? 8,500 ரூபாயில் லேசர் பிரின்டரின் விலை ஆரம்பித்து 1,50,000 வரையில் முடிகிறது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரின்டரை வாங்கலாம்.

1.பிரின்டரில் Resolution என்பது முக்கியம். இதை Dots per inch (dpi) என்ற அலகில் குறிப்பிடுவார்கள். இந்த அளவு கூடுதலாக இருப்பது நல்லது. 300 dpi ரெசல்யூசன் கொண்ட லேசர் பிரின்டர்கள் சாதாரணமாகப் போதுமானது. சிறிது விலை அதிகமானாலும் பரவாயில்லை, அச்சின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 600 dpi ரெசல்யூசனுக்குச் செல்லலாம். 1200 dpi அல்லது அதற்கு மேல் ரெசல்யூசன் கொண்ட பிரின்டர்களின் அச்சடிப்பு களை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.

2.பிரின்டரின் Interface அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். பேரலல் போர்ட் அல்லது யுஎஸ்பி (USP) போர்ட் அல்லது இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற லேசர் பிரின்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்களிடம் பழைய கம்ப்யூட்டர் இருந் தால் அதில் யுஎஸ்பி போர்ட் இருக்காது. அப்படியானால் பேரலல் போர்ட் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். கம்ப்யூட்டரில் யுஎஸ்பி போர்ட் உள்ளவர்கள் யுஎஸ்பி இன்டர் பேஸ் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். காரணம், இதன் வேகம் அதிகம்.

3. எவ்வளவு காகிதங்களை பிரின்டரின் டிரேயில் வைக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். விலை குறைந்த சில பிரின்டர்களில் ஏறத்தாழ 100 காகிதங்களை மட்டுமே டிரேயில் வைக்க முடியும். விலை கூடிய ஒரு சில பிரின்டர்களில் ஏறத்தாழ 600 காகிதங்களை வைக்க முடியும். நிறைய காகிதங்களைப் பிரின்டரில் வைப்பதாக இருந்தால், அச்சடிக்கும் கட்டளையை கொடுத்து விட்டு வேறு வேலைகளை நீங்கள் பார்க்கலாம். இல்லையெனில் பிரின்டரின் பக்கத்திலேயே நின்று கொண்டு காகிதங்கள் தீர்ந்து போனால் புது காகிதங்களை அடுக்க வேண்டியிருக்கும்.

4.யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்தை கொடுக்காமல் விட்டால் என்னவாகும்? அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும்? பல நிறுவனங்கள் இந்த கேபிள்கள் இல்லாமல் லேசர் பிரின்டர்களை விற்கின்றன. தனியாக இந்த கேபிள்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். எனவே பிரின்டருடன் இன்டர் பேஸ் கேபிளையும் சேர்த்து தருகிறவர் களிடமே வாங்குங்கள்.

5. வாங்கப் போகும் லேசர் பிரிண்டருக்கான டோனரின் விலை குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டோனர் தீர்ந்தவுடன் உடனடியாக கிடைக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.

6. டோனரின் விலையைப் பார்ப்பதை விட மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அந்த அம்சத்தை பலர் கண்டு கொள்ளுவதே இல்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஒரு பக்கத்தை அச்சடிக்க எந்த பிரின்டரில் செலவு குறைவாக வருகிறதோ அதுதான் சிறந்த பிரின்டர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

7. LCD display உள்ள லேசர் பிரின்டராக இருந்தால் நல்லது. என்ன நிலையில் இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை எல்சிடி மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

8. Led விளக்குகள் நிறைய இருந்தால் நல்லது. பொதுவாக Power, Paper jam, Toner low, load Paper, Paper out, Ready, Error, Manual, Data, Alarm போன்ற பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சிறு விளக்குகள் இருந்தால் நல்லது. எல்சிடி டிஸ்பிளே இல்லாத லேசர் பிரின்டர்களில் இந்த விளக்குகள்தான் உங்களுக்கு உதவும்.

9. Input Buffer எனப்படுகிற நினைவகம் அதிகம் இருக்க வேண்டும். 12 MB buffer உள்ள பிரின்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும். குறைந்தது 8 எம்பி பபர் உள்ள லேசர் பிரின்டரை வாங்குவது நல்லது.

10. காகிதங்களை வைப்பதற்கான டிரேக்கள் (Tray) எத்தனை தரப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எல்லா பிரின்டர்களிலும் கண்டிப்பாக ஒரு டிரே இருக்கும். இன்னொரு டிரே கூடுதலாக இருப்பது நல்லது.

11. Manual மற்றும் Quick Start Guide ஆகிய உதவிப் புத்தகங்களை லேசர் பிரின்டருடன் தருகிறார்களா என்று பாருங்கள். சிக்கலான நேரங்களில் இருந்த புத்தகங்கள் கை கொடுக்கும்.

12. எடையும், அளவும் எவ்வளவு என்று பாருங்கள். இடம் குறைந்த அலுவலகம் அல்லது சிறிய மேஜையில் பிரின்டரை வைக்க விரும்புபவர்கள் நீள, அகலம் குறைந்த பிரின்டர்களை வாங்குவது நல்லது.

13. உத்தரவாத காலம் அதிகமாக இருக்க வேண்டும். 3 வருடங்கள் உத்தரவாத காலம் கொண்ட பிரின்டர்களாக இருப்பது நல்லது.

14. உங்கள் இடத்துக்கே வந்து பிரின்டரை சரி பார்ப்பார்களா அல்லது அவர்கள் இடத்துக்கு நீங்கள் பிரின்டரை தூக்கிச் செல்ல வேண்டுமா என்பதை விசாரியுங்கள்.

15. உங்கள் ஊரில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் ஊருக்கு அருகில் எங்கு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.



நம்மில் பலர் கூகிளின் சேவையான கூகிள் டாக் அல்லது ஜி-டாக் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் ஜி-டாக் இல் லாக் இன் செய்ய முடியாது .

கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.முதலில் Gtalk messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

01. முதலில் உங்கள் கணித்திரையில் முன்பக்கத்தில் உள்ள G-talk Shortcut ஐ Right click செய்யுங்கள். அல்லது Start -> All Programs -> Google Talk -> Google Talk சென்று Right click செய்யுங்கள்.








அல்லது









02.இனி Shortcut tab ஐ கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியவாறு /startmenu என்பதை -nomutex ஆக மாற்றுங்கள் .அவ்வளவுதான் இனி OK செய்து வெளியேறுங்கள்.







































இனியென்ன ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களையும் கூறவும்.


எழுதியவர் : கார்த்திக் 04 May 2009
ஜிமெயிலின் ஒரு பெரிய வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் (கொடவுண்) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும். இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம்.

இந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது. அப்புறம் என்ன செய்கிறது? ஏன் எடுக்கிறது? இது உங்கள் இமெயில்களை ஒரு ஒழுங்கு செய்திடும் வேலை தான். நீங்கள் ஆச்சரியப்படலாம். இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இமெயில் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம். து நீங்கள் அந்த இமெயில் செய்திக்கு ஏதேனும் லேபிள் பெயர் தந்திருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது. நீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது.இதனை ஆல் மெயில் பிரிவிலும் (All Mail) பார்க்கலாம்.

இதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு இமெயில் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது. இதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை. இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக "Inbox என்று இருப்பதைக் காணலாம். இது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மெயில்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படுகின்றன.

இதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன் பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு இமெயில் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு லேபில் கொடுக்கவும். ஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம். இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த இமெயில் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள். இங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படும்.


இப்போது
மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள். அடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனால் இன்பாக்ஸ் லேபில் இருக்காது. ஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த இமெயில் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்படமாட்டாது. நீங்கள் தான் அதனை கொடவுணில் போட்டு விட்டீர்களே.

அப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா? கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. தாராளமாகக் கொண்டு வரலாம். ஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும்.

ஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில இமெயில்களை எடுத்துச் சென்று தனியே பிரித்தெடுத்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.




கம்ப்யூட்டரின் முதுகுத் தண்டாக இருந்து அனைத்து வேலைகளுக்கும் தேவையான செட்டிங்ஸை வழங்கி செயல்படுத்துவது விண்டோஸ் இயக்கத்தின் ரெஜிஸ்ட்ரியாகும். இதில் மாற்றங்களை ஏற்படுத்துகையில் கவனமாக இருக்க வேண்டும். சரியாக மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்குவதில் பிரச்சினை ஏற்படலாம். அல்லது மொத்தமாகவே இயங்குவதில் சிக்கல்கள் உருவாகலாம்.

இதற்காகவே இதில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன் ரெஜிஸ்ட்ரியை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அப்போது தான் சரியாக மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் இவ்வாறு சேவ் செய்த பேக் அப் பைலை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு எவ்வாறு பேக் அப் செய்வது என்பதனையும் அதனை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்பதனையும் காணலாம்.

விண்டோஸ் 98 மற்றும் ME ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் யன்படுத்துவோருக்கு

Start /Run சென்று அங்கு கிடைக்கும் பாக்ஸில் regedit என டைப் செய்திடவும். அடுத்ததாக Registry மெனு செல்லவும். அடுத்து Export Registry File என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் இதனை சேவ் செய்திட ஒரு இடம் தேர்ந்தெடுத்து அதில் இந்த பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும்.

















நான் Regbackup_04052009 எனக் கொடுப்பேன். அப்போதுதான் எந்த தேதியன்று இந்த ரெஜிஸ்ட்ரி சேவ் ஆனது என்று தெரியும். அவ்வளவுதான்! ரெஜிஸ்ட்ரி பைல் பேக் அப் ஆகிவிட்டது.
















எக்ஸ்பி
பயன்படுத்துவோருக்கு

Start /Run சென்று அங்கு கிடைக்கும் பாக்ஸில் regedit என டைப் செய்திடவும். அடுத்து File மெனு கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Export என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் இதனை சேவ் செய்திட ஒரு இடம் தேர்ந்தெடுத்து அதில் இந்த பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். ஏற்கனவே சென்ற பாராவில் இதற்கு எப்படி பெயர் வைக்கலாம் என்று நான் குறிப்பிட்டிருப்பதனை மனதில் கொள்ளவும். இந்த இடத்தில் உங்கள் கவனத்திற்கு ஒரு தகவல். கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி அதனை மூடுகையில் ஒவ்வொரு முறையும் Windows is saving your settings என்று வருகிறது அல்லவா! அப்போது விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்கிறது. இருப்பினும் நாமும் சேவ் செய்வது நமக்கு நல்லது.


































சரி, ரெஜிஸ்ட்ரியை சேவ் செய்துவிட்டோம். பிரச்சினை ஏற்பட்டது என்றால் எப்படி இதனை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டுவருவது என்று பார்க்கலாம்.

முதலாவதாக விண்டோஸ் உங்கள் ரெஜிஸ்ட்ரியை லோட் செய்கையில் அதில் ஏதேனும் ஒரு பிரச்சினைக்குரிய கோடிங்கை கண்டு கொண்டால் தானாகவே அது தான் கடைசியாக பேக்கப் செய்த ரெஜிஸ்ட்ரியை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும். ஆனால நீங்களாக ரெஜிஸ்ட்ரியுடன் விளையாண்டு அது சரியாக அமைக்கப்படாமல் சிக்கல் ஏற்பட்டது என்றால் நீங்கள் தான் சரி செய்திட வேண்டும்.

Registry Editor Registry மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து உங்கள் பேக் அப் பைலைச் சுட்டிக் காட்டுங்கள். அதன் பின் Import Registry என்பதில் கிளிக் செய்திடுங்கள். மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடுங்கள். சரியாகிவிடும்.

நீங்கள் வழக்கமாக பேக் அப் செய்திடும் பணியை ஒரு புரோகிராம் மூலம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவரா? கவலையே இல்லை. நீங்கள் அந்த புரோகிராமில் எந்த எந்த பைல்களை எல்லாம் தானாக பேக் அப் செய்திட வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் இதற்கான இரண்டு பைல்களையும் சேர்த்துவிடுங்கள்.

சேர்க்க வேண்டிய பைல்களின் பெயர்கள்: "User.dat" மற்றும் "System.dat"